“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. சுமார் 51% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றி உறுதியானதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் அறிவிப்பு வெளியான பிறகு, குடியரசுக் கட்சிக்கு வாழ்த்துச் செய்திகள் குவிய தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய பிரதமர் மோடி, “வரலாற்று வெற்றி பெற்ற இத்தினத்தில் நண்பருக்கு தனது வாழ்த்துகளை “தெரிவித்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நெதன்யாகு “அன்புள்ள டொனால்ட் மற்றும் மெலனியா டிரம்ப், வரலாற்றின் மிகப்பெரிய ரீ என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.
வெள்ளை மாளிகைக்கு உங்கள் வரலாற்றுத் திருப்பம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியையும் வழங்குகிறது. “இது மாபெரும் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
Dear Donald and Melania Trump,
Congratulations on history’s greatest comeback!
Your historic return to the White House offers a new beginning for America and a powerful recommitment to the great alliance between Israel and America.
This is a huge victory!
In true friendship,… pic.twitter.com/B54NSo2BMA
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) November 6, 2024