“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

PM Modi - Trump

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தொடங்கிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலைப் பெற்று, 538 மாகாணங்களில் 277 இடத்தில் வெற்றிப் பெற்று அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வாகி உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இந்த நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், வெற்றி பெற்றதை அறிவித்த பிறகு அவரது ஆதரவாளர்கள் முன்னாள் டிரம்ப் உரையாற்றினார். அதில், குறிப்பாக பல தடைகளைத் தாண்டி நான் வெற்றிப் பெற்றுள்ளேன். மேலும் வெற்றி பெற வைத்த அமெரிக்க மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபராக தேர்வான டொனால்ட் டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” அமெரிக்காவில் வரலாற்று வெற்றி பெற்ற என் நண்பர் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.

இந்தியா-அமெரிக்க இடையேயான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், எங்களது ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகி காத்திருக்கிறேன். நாம் ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதிகாகவும், நாட்டின் வளத்தை மேம்படுத்தவும் பாடுபடுவோம்”, என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்