அதிபர் பதவியை நெருங்கும் டிரம்ப்.! ஜார்ஜியாவில் வெற்றி.!
ஜார்ஜியா மாகாணத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 246 எலக்டோரல் வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இன்னும் 24 வாக்குகள் பெற்றால் அதிபராக அவர் அறிவிக்கப்படுவார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவ்வப்போது முன்னேறி வந்தாலும் வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறார் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்.
இதற்கு முன்னர் 230 வாக்குகளை டிரம்ப் பெற்றிருந்தார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை பெற்றிருந்தார். இப்படியான சூழலில், தற்போது ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சி அதிக வாக்குகளை பெற்று அங்குள்ள 16 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் டிரம்ப், தற்போது 246 வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபர் ரேஸில் முந்தி சென்றுள்ளார். இன்னும் பெரும்பான்மைக்கு (270) 24 இடங்களே தேவை என்ற நிலையில், அரிசோனா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் டிரம்ப்பின் குடியரசு கட்சி தான் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் டிரம்ப் இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்கஅதிபராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.