தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

பல தடைகளை தகர்த்து, கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Minister Senthil Balaji - Tamilnadu CM MK Stalin

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் நூலகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்த அமைச்சர்  செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை கண்டு பொறுக்க முடியாமல் சிலரது சதியால் அவருக்கு பல்வேறு தடைகள் கொடுக்கப்பட்டன. இது அரசு நிகழ்வு என்பதால் நான் அதற்குள் முழுதாக செல்ல விரும்பவில்லை.

ஆனால், அந்த தடைகளை செந்தில் பாலாஜி தகர்த்து, தற்போது மீண்டும் கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்.” என அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் முதல்வர் பேசுகையில், “சென்னையில் அண்ணா நூலகம் இருக்கிறது. மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் இருக்கிறது. கோவையில் இவர்கள் இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையவுள்ளது. ரூ300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் நூலகத்தோடு சேர்த்து அறிவியல் மையத்தையும் அமைக்க உள்ளோம். இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026 ஜனவரியில் திறக்கப்படும்.

கோவையில் விளை நிலங்களில் யானைகள் புகாத வண்ணம் நவீன வேலிகள் அமைக்கப்படும்.  ரூ.1848 கோடி மதிப்பீட்டில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும், 17 ஏக்கரில் கோவையில் ஐடி பார்க் திறக்கப்படும், கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும். ” உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை நிகழ்வில் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin