“தோனியின் நாள் இன்று ” சமூகவலைத்தளத்தில் வைரலாக வாழ்த்து..!!
இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக விளங்கிய கேப்டன்களில் ஒருவராக கிடைத்தவர் தான் மஹேந்திர சிங் தோனி.
டிராவிட்டுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபோது இந்தியா ஏ அணியில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், தோனி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
தோனியின் அதிரடி பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமைகளைக் கண்ட பிசிசிஐ, அவரை இந்திய அணியில் இணைத்தது. 2004ம் ஆண்டு நடந்த வங்கதேச தொடரில் அறிமுகமானார். அதன்பின்னர் அணியில் பேட்ஸ்மெனாக ஜொலித்து சிறந்த கீப்பராகவும் தடம்பதித்தார். 2007ம் ஆண்டு கங்குலி ஓய்வு பெற்ற பிறகு, இளம் தோனியிடம், கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது. முதன் முதலாக கேப்டன் பொறுப்பேற்று களமிறங்கிய நாள் இன்று(14.00.18).
DINASUVADU