“தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்” ..இன்று 4 மாவட்டத்துக்கு கனமழை…வானிலை மையம் தகவல்!
இன்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5) மற்றும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இன்று கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தமிழகத்தை பொறுத்தவரையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல நாளை, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ7 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அடையமடை (கன்னியாகுமரி மாவட்டம்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) 8ஸ் செமீ. கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.