சாம்பியன்ஷிப்பை விடுங்கள் ஆஸ்திரேலிய தொடர் மீது கவனம் செலுத்துங்கள் – அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்!

ஆஸ்திரேலிய தொடரை முதலில் வெற்றிப் பெறுங்கள் என இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Sunil Gavaskar

மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இதனால், இந்திய அணி கடுமையான ஒட்டு போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து அணியின் வலுவான ஆட்டத்தால் இந்திய அணி அந்த தொடரை 3-0 எனத் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணிக்கு டெஸ்ட் புள்ளிபட்டியலிலும் பின்னடைவு ஏற்பட்டது.

மேலும், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெரும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்திய அணிக்கு தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு ஆஸ்திரேலிய அணியை 4-0 என வீழ்த்த வேண்டும், என்றாலே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அமையும்.

இதனால், இந்த தொடரில் சிறப்பாக விளையாட இந்திய அணி தீவீர திட்டங்கள் வகுத்து வருகிறது, இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இந்த தொடரைக் கைப்பற்ற என்ன வழியோ அதைச் செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இந்தியாவால் வீழ்த்த முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதைச் செய்தால் நான் சந்தோசத்தின் உச்சத்தில் இருப்பேன். ஆனால், ஒருவேளை இந்தியா 3-1, 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றி நான் பேச விரும்பவில்லை. அதைக் குறித்து நினைப்பதை தற்போது விடுங்கள். இப்போது ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும் முயற்சியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எப்படி வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. முதலில் சென்று வெற்றி பெறுங்கள். அப்படிச் செய்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியில் இருப்பார்கள்” , என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்