இபிஎஸ் கூறியது பொய்.! இதுதான் உண்மை.! வெளியான பரபரப்பு தகவல்.!
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம் பால்பண்ணை காவல்நிலைய எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். அப்போது பின்னல் வந்த கார் மோதியதில் எஸ்.ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த காவலர் நித்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இபிஎஸ் குற்றசாட்டு :
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல்துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர். மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல்துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும்.
பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டிருந்தார்.
உண்மை தகவல் :
இந்த தகவலை குறிப்பிட்டு, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் உண்மை கண்டறியும் அமைப்பானது (TN Fact Check) இந்த தகவலை பொய் என மறுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட விளக்க அறிக்கையில், ” பெண் காவலர்கள் இருவரும் பணி நிமித்தமாக செல்லவில்லை. அவர்கள் குற்றவாளிகளை பிடிக்க சென்றபோது விபத்தில் சிக்கியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஆவடி காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார் ” என பதிவிடப்பட்டுள்ளது.
குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற போது பெண்
காவலர்கள் விபத்தில் இறந்ததாகப் பொய்!@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/QIcjPCsfH6 pic.twitter.com/CNzXwFKiH0— TN Fact Check (@tn_factcheck) November 4, 2024