அட்ராசக்க..பம்பர் வாய்ப்பு! LCU-வில் என்ட்ரி கொடுக்கும் “கட்சி சேர” பிரபலம் சாய் அபியங்கர்!
ஆல்பம் பாடல்களை வெளியீட்டு பிரபலமான பாடகர் திப்புவின் மகன் சாய் அபியங்கர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.
அவருடைய இசை ரசனைகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ள காரணத்தால் அவருக்குப் படத்தில் இசையமைக்க வாய்ப்புகள் வரவேண்டும் என்பது ரசிகர்களுடைய ஆசையாக இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, அவருக்கு முதல் படமே லோகேஷ் கனகராஜின் படத்திற்கு இசையமைப்பதற்கான பம்பர் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, லோகேஷ் கனகராஜ் சினிமாவில் இப்போது LCU என்ற பாணியைக் கொண்டு வந்து இருக்கிறார்.
அந்த LCU-விற்குள் ராகவா லாரன்ஸ் மஸ்டரை கொண்டு வரத் திட்டமிட்டு தன்னுடைய கதையைச் சுல்தான் படத்தினை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனிடம் கொடுத்து இயக்க கூறி அந்த படத்தை லோகேஷ் தயாரிக்கிறார். படத்திற்கான தலைப்பு கூட பென்ஸ் என அதற்கான டீசர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அது மட்டுமின்றி, இந்த படம் LCU-வில் இணையும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்த படத்திற்கு யார் இசையமைத்தால் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டு வந்த நிலையில், வளர்ந்து வரும் சாய் அபியங்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இவர் இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, லோகேஷ் கனகராஜின் LCU-விற்குள் கைதி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சாம்சி வந்துவிட்டார். அதைப்போல, விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் அனிருத்தும் வந்துவிட்டார். இப்போது பென்ஸ் படத்திற்கு இசையமைத்தால் சாய் அபியங்கரும் LCU-விற்குள் வந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.