ரிஷப் பண்ட்…கேஎல்ராகுல்…அந்த 5 வீரர்களை குறிவைக்கும் சென்னை -மும்பை!
ஐபிஎல் 2025 தொடருக்காக நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேஎல்ராகுல் என மொத்தம் 5 பெரிய வீரர்களை மும்பை மற்றும் சென்னை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்…
கே.எல்.ராகுல்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் ஏலத்தில் விடுத்துள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் நல்ல தொடக்க ஆட்டக்காரரைத் தேடிக்கொண்டு இருப்பதால் நிச்சயமாக ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை, 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ராகுல் 4,683 ரன்களை சேர்த்துள்ளார்.
ரிஷப் பண்ட்
ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரிஷப் பண்ட். இவர் டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடி வந்த நிலையில், அவரை அணி தக்க வைக்கவில்லை எனவே, சென்னை- மும்பை மட்டுமின்றி பல அணிகள் அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. செய்தி வட்டாரங்கள் கொடுத்த தகவலின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் பண்ட் அவர்களை அணியில் சேர்க்க விரும்புகிறது. அவரது திறமையால் அணிக்குப் பெரிய பலமாக அமையக்கூடும். அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணியும் இஷான் கிஷானை விடுத்துள்ள காரணத்தால் அவர்களுக்கு விக்கெட் கீப்பர் வேண்டும். எனவே, அவர்களும் பண்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமையான சுழற்பந்து வீச்சாளர் என்பதைப் பற்றிச் சொல்லித் தான் தெரியவேண்டும் என்று இல்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் விளையாடிய சுந்தர் இந்த முறை அவரை விடுத்துள்ளது. எனவே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அவரை ஏலத்தில் எடுக்க நிச்சயம் போட்டிபோடும் எனத் தகவல்கள் கிடைத்திருக்கிறது. CSK அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே ஆகியோரை retain செய்திருந்தாலும், மற்றொரு ஆல்ரவுண்டரை தேடிக்கொண்டு இருக்கிறது.
அதைப்போல மற்றொரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியில், தக்க வைக்கப்பட்ட ஒரே ஒரு ஆல் ரவுண்டர் என்றால் ஹர்திக் பாண்டியா தான். எனவே, அவர்களுக்கு மற்றொரு ஆல்-ரவுண்டர் தேவை என்பதால் வாஷிங்டன் சுந்தரை அணியில் ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஷ்ரேயஸ் ஐயர்
2024 ஐபிஎல் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் கேப்டனாக விளையாடி வந்த ஷ்ரேயஸ் ஐயர் தானே அணியிலிருந்து விலகி இருக்கிறார். எனவே, மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் அவரைத் தங்களின் அணியில் சேர்க்க முற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இவருக்காக ஏலத்தில் கடும் போட்டி நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
முகமது சிராஜ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வந்த முகமது சிராஜ் பந்துவீச்சில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று, 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதேசமயம் 9.19 என்ற பொருளாதார விகிதத்தை வைத்திருந்தார். இந்த சூழலில் அவரை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தக்க வைக்கப்படவில்லை.
இந்நிலையில், MI மற்றும் CSK ஆகிய அணிகள் தங்களின் பந்துவீச்சு அணியில் வேகப்பந்துவீச்சாளரைச் சேர்க்க விரும்பி இருப்பதால், சிராஜின் மீது இரு அணிகளும் ஏலப்போட்டியில் தீவிரமாக ஈடுபட வாய்ப்புள்ளது.