இது தான் அப்டேட்! பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த இன்ப செய்தி!

வாட்ஸ்அப் Chatகளை நண்பர்கள், குடும்பம் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா கொண்டுவந்துள்ளது.

whatsapp CUSTME CHAT

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை கொண்டு வந்து பயனர்களை மெட்டா கவர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏற்கனவே, வாட்ஸ்அப்பில் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் AI தொழிநுட்பம் வசதியைக் கொண்டு வந்தது. அதன்பிறகு, நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு பார்ப்பவர்கள் லைக்குகள் போடும் வசதியைக் கொண்டு வந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இப்போது நமது சேட்டிங்கை தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு அதனைத் தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற வகையில் வசதி ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நம்மளுடைய வேலை விஷயங்களைத் தனியாக வைத்துக்கொள்ளவும், கல்வி, குடும்பம் என ஒரு தனித் தனியாக ஒரு பிரிவாகப் பிரித்துக்கொள்ளும் வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த அப்டேட் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவைப்படும் சேட்டிங்கை மட்டும் வைத்துக்கொண்டு என்னென்ன விஷயங்களைப் பார்த்துக்கொள்ளவேண்டுமோ அதனை பார்த்துக் கொள்ளலாம் எனவும் இன்பமான செய்தியை வாட்ஸ்அப் கொடுத்துள்ளது.  இந்த அப்டேட் ஆண்ட்ராடு போன் வைத்திருக்கும் சிலருக்கு ஏற்கனவே வந்துவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளில் அனைவர்க்கும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்டேட் வந்தவுடன் எப்படிப் பார்ப்பது என்றால் முதலில் வாட்ஸ்அப்பை திறந்த பிறகு + என்பதை க்ளிக் செய்யவேண்டும். அதன்பிறகு அதில் இந்த அம்சம் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும். பின், பயனர்கள் தனிப்பட்ட மற்றும் குழு ஆகிய எந்த சேட்டிங்கை தங்களுக்கு விருப்பமான பட்டியலில் சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள பட்டியல்களைத் திருத்துவது மிகவும் எளிமையானது தான். நிறைய மெசேஜ் வருபவர்களுக்குத் தனிப் தனி பிரிவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருந்த நிலையில், இந்த அப்டேட் ஒரு நல்ல விஷயமாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்