இந்தியா – கனடா முற்றும் மோதல்: வெடித்தது புதிய பிரச்சனை.! கோயிலில் தாக்கப்பட்ட இந்துக்கள்…

கனடாவின் பிராம்டனில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Hindus in Canada

கனடா : பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து சபா கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து பக்தர்கள் மீது, கம்புகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கனடாவில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. டொரன்டோ தூதரக முகாமிற்கு வெளியே போராடிய காலிஸ்தான் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஹிந்து கோயில்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில், “பிராம்டன் பகுதியிலுள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை உண்டு. துரிதமாக செயல்பட்டு மக்களை பாதுகாத்த காவல்துறைக்கு பாராட்டுகள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவை ஒரு தீவிரவாத நாடாகவும், தீவிரவாதத்தை சர்வதேச அளவில், பிற நாடுகளின் மேல் ஏவி விடும் நாடாகவும் கனடா அறிவித்துள்ளது. ஆம், கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-26 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில் 5வது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.

இவ்வாறு, இந்தியா மற்றும் கனடா இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்