மெய்யழகன்: “சிறுவயது நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது” – அன்புமணி பதிவு!

சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது என்று மெய்யழகன் படத்தை பாராட்டி அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

anbumani meiyazhagan

சென்னை : இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கத்தில், அரவிந்த் சுவாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் கடந்த செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்று இப்பொது ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது.

படத்தில் ராஜ்கிரண், சரண் சக்தி, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண்,  சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், மெய்யழகன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ‘மெய்யழகன்’ படத்தை அன்புமணி வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன்.

முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்