அமரன் படத்தை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை…நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

annamalai amaran

சென்னை : பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புயலைக் கிளப்பி மக்களை எமோஷனலாக கண் கலங்க வைத்துள்ள அமரன் படத்தைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, சினிமாவில் அனுபவம் வாய்ந்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி இருந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமரன் படத்தினை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளைத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு படம் நன்றாக இருந்தது என்று சொல்லாமல் படத்தின் கதை குறித்தும், இயக்குநர், நடிகர், நடிகை என தனித்தனியாகத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” அமரன் படத்தினை நான் சமீபத்தில் பார்த்தேன். இந்த படம் மிகவும் முக்கியமான படம். இராணுவச் சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் காட்டும் வீரம், தைரியம் மற்றும் நேர்மை எஞ்சியவர்களைக் காக்க நம் தேசம் தங்களைத் தியாகம் செய்யும் போது ஒரு குடும்பம் செலுத்தும் செலவின் தெளிவான விஷயங்களைப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

ஏன் சிலர் எப்பொழுதும் மற்றவர்களை விட இராணுவ வீரர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றால் அவர்கள் தங்கள் சீருடையைப் பெருமையுடன் அணிந்துகொண்டு நமக்கு வரும் ஆபத்துகளை எதிர்கொள்வார்கள். உணர்ச்சிகரமான உழைப்பு மற்றும் வலி – ஒரு இராணுவ வீரரின் குடும்பம் சுமக்கும் ஆனால் பெருமையுடன் அவர்கள் இருக்கவேண்டும்.

மேஜர். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 இல் அவர் நம் தேசத்துக்காகச் செய்த இறுதித் தியாகம், எங்களுக்குள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வை நம் அனைவர்க்கும் ஏற்படுத்தியது, அப்போது நான் காக்கியிலிருந்தபோது அந்த உணர்ச்சிகரமான தருணங்களை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன்.

ராஜ்குமார் பெரிய சாமி ஒரு அற்புதமான படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தனது வேறுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதைப்போலச் சாய் பல்லவி நடிப்பும் நன்றாக இருந்தது. படத்திற்கு உயிரூட்டும் ஒரு காரணமாக இசையும் இருந்தது. இந்த மாதிரி நல்ல படத்தைத் தயாரித்த கமல்ஹாசனுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை படத்தினை பார்த்துவிட்டு பாராட்டியதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested
Sahitya Akademi Award - venkatachalapathy