Live : சீமானுக்கு பிரேமலதா எழுப்பிய கேள்வி…இறுதிக்கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை!

இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

live 05.11.2024

சென்னை :  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாக மாறுவார்; திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். விஜயை ஏன் தம்பி என அழைக்க வேண்டும், பிறகு ஏன் லாரியில் அடிபடுவார் என சொல்ல வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சீமானுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க பரபரக்கும் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான இறுதிப்பரப்புரையும் தீவிரமாக நடந்து வருகிறது.

1 of 1
மணிகண்டன்

இபிஎஸ் கூறியதில் உண்மையில்லை :

மாதவரம் எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா, குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள் என இபிஎஸ் பதிவிட்டதில் உண்மையில்லை என தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

கெளதம்

விமானப்படை விமானம் விபத்து :

  • உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு. விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பாராசூட் மூலம் விமானி பத்திரமாக வெளியேறினார்.
  • பால முருகன்

    ஜெய்ஷாவிற்கு பதில் இவரா?

  • தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லியை ஜெய்ஷாவிற்கு பதில் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • கெளதம்

    நடிகை கஸ்தூரி விளக்கம் :

    தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக கூறப்படும் அப்பட்டமான பொய்யை யாரும் நம்ப வேண்டாம். நான் ஒரு பிராமணர் என்பதால் தான் என்னை குறிவைத்து இதுபோன்ற பொய்களை கூறுகின்றனர். பிராமணர்கள் மட்டும் மீது ஏன் இந்த வன்மம்? என்று நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார்.

    கெளதம்

    சட்டப்பிரிவு 370 பாஜக எதிர்ப்பு :

  • ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவது குறித்த தீர்மானத்தை மக்கள் ஜனநாயக கட்சியின் (PDP) எம்எல்ஏ வஹீத் பாரா முன்மொழிந்தார்.
  • இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி 28 பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பால முருகன்

    அமரனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு

  • எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “அமரன் திரைப்படம் அருமையான திரைப்படம். அனைவரும் இந்த நல்ல திரைப்படத்தை பார்க்கவேண்டும்” என கூறிஉள்ளார்.
  • AMARAN ???????????? ????????what a movie ???????????????????? @ikamalhaasan sir , @Rajkumar_KP sir , @Siva_Kartikeyan sir , @Sai_Pallavi92 &team???????????????????? … MUST WATCH ( I am madurai for a shoot …got some time … watched the movie at @Gopuram_Cinemas ) majormukundvaradarajan ???????? jaihind pic.twitter.com/Juzjx4YplS
    — S J Suryah (@iam_SJSuryah) November 4, 2024

    பால முருகன்

    அமரனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு

  • எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “அமரன் திரைப்படம் அருமையான திரைப்படம். அனைவரும் இந்த நல்ல திரைப்படத்தை பார்க்கவேண்டும்” என கூறிஉள்ளார்.
  • கெளதம்

    நீதிமன்றக் காவல் நீட்டிப்பு:

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவ.14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • பால முருகன்

    UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு!

  • நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது.
  • கெளதம்

    தலைவராக அப்துல் ரஹீம் ராதர் :

  • ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவை தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரான அப்துல் ரஹீம் ராதர் தேர்வாகியுள்ளார். எதிர்க்கட்சியான பாஜக சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாததால், அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
  • அகில் R

    திமுகவை விமர்சிக்கும் எச்.ராஜா :

  • நடிகர் அஜித் குமாரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காதா என்று திமுக முயற்சி செய்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
  • பால முருகன்

    பள்ளி தற்காலிகமாக மூடல்

  • சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2 வாரங்களுக்கு முன் வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
  • பால முருகன்

    இன்று 10 மாவட்டங்களில் கனமழை

  • இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • மணிகண்டன்

    கஸ்தூரி விளக்கம் :

  • தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாக பேசியதாக திமுகவினர் தான் அவதூறு பரப்புகின்றனர் என்று நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டி வருகிறார்.
  • பால முருகன்

    பேருந்து விபத்து – 20 பேர் பலி

    உத்தராகண்டம் மாநிலத்தில் பேருந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

    மணிகண்டன்

    கொளத்தூர் நலத்திட்டங்கள் :

  • சென்னை கொளத்தூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு முன்னர், அனிதா பயிற்சியகத்தில் பயின்றவர்களில் 107 பேருக்கு இலவச லேப்டப், 350 பேருக்கு தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
  • அகில் R

    நீட் தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் :

  • நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது. இன்று இல்லாவிட்டாலும், நாளைக்கு அல்லது நாளை மறுநாள் நீட் தேர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்பிக்கை இருக்கிறது – கொளத்தூர் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
  • பால முருகன்

    மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

  • புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். ‘வாழ்க வசவாளர்கள்.,’ அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கொளத்தூர் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
  • பால முருகன்

    மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு

  • சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2 வாரங்களுக்கு முன் வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • அகில் R

    சென்செக்ஸ் வீழ்ச்சி :

  • மும்பை பங்குசந்தையான ‘சென்செக்ஸ்’ 1200 புள்ளிகளுக்கு மேலும், தேசிய பங்குசந்தையான ‘நிஃப்டி’ 400 புள்ளிகளுக்கு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலையொட்டி முதலீட்டாளர்கள் பங்குகளை கவனமாகக் கையாளுவதே இந்த வீழ்ச்சிக்கானக் காரணம் என கருதப்படுகிறது.
  • மணிகண்டன்

    அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை :

    சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கணேசன் என்பவரை மர்ம நபர்கள் இன்று வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பாசேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அகில் R

    6 மாவட்டங்களுக்கு கனமழை :

    கடலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் அதாவது பகல் 1 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பால முருகன்

    கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை

  • கேரளாவில் பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.
  • மணிகண்டன்

    ஊட்டி ரயில் சேவை ரத்து :

  • குன்னூர் பகுதியில் பெய்த கனமழை, அதனைத் தொடர்ந்து கல்லாறு – குன்னூர் பகுதி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையேயான மலைரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    பாஜக வாக்குறுதிகள் :

  • ஜார்கண்ட் மாநில சட்டமனற தேர்தலுக்காக, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21 ஆயிரம் நிதியுதவி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டப்படும், பெண்களுக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
  • பால முருகன்

    மெய்யழகனுக்கு பாராட்டு ;

  • “பார்வையாளர்களை உறவுக் கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர் பிரேம்குமார். கார்த்தி, அரவிந்த் சாமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.” என மெய்யழகன் படத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
  • பால முருகன்

    இதுதான் கடைசி -ஓய்வை அறிவித்த ரித்திமான் சாஹா

  • நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார்.
  • பால முருகன்

    வசூல் புயலில் அமரன்

  • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள “அமரன்” படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • பால முருகன்

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • நேற்று இரவு நீலகிரி குன்னூர் தாலுகாவில் கனமழை வெளுத்து வாங்கிய காரணத்தால் குன்னூர் தாலுகாவில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்