செங்கோட்டையில் மீண்டும் பரபரப்பு ….! இருதரப்பினரிடையே வெடித்தது மோதல்….! ஏராளமான போலீசார் குவிப்பு …!பலர் காயம் …

Default Image

நெல்லையில் உள்ள செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம்  செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதையடுத்து  செங்கோட்டை, தென்காசி ஆகிய 2 தாலுகாக்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல் இந்த பகுதிகளில்  உள்ள  டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நாளை (செப்.,15) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தொடரும் எனவும் நெல்லை  மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் தெரிவித்தார்.

செங்கோட்டை, தென்காசியில் 144 தடை - கலெக்டர் அறிவிப்பு

இந்நிலையில்  இன்றும் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.குண்டாற்றில் கரைப்பதற்காக இன்று மீண்டும் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு  ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்