என்னை ஏன் திமுகவில் சேர்க்கவில்லை….!திமுக தலைவரிடம் போய் கேளுங்கள்….!மு.க.அழகிரி ஆவேசம்
என்னை ஏன் திமுகவில் சேர்க்கவில்லை என என்னிடம் கேட்காதீர்கள் என்று மு.க.அழகிரி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் கருணாநிதியின் மூத்த மகனும் தனக்கு கட்சியில் இடம் வேண்டும் நீண்ட நநாட்களாக போராடி வந்தார்.பின்னர் சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில் பல்வேறு கருத்துக்கள் மு.க.அழகிரியை சுற்றி நடக்கும் நிலையில் இன்று மீண்டும் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுகவில் மீண்டும் ஏன் சேர்க்கவில்லை என என்னிடம் கேட்பதற்கு பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள்.என்னை ஏன் திமுகவில் சேர்க்கவில்லை என என்னிடம் கேட்காதீர்கள் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.