கேரளாவில் ரயில் விபத்து! 4 தமிழர்கள் உயிரிழப்பு!
கேரளாவில் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா : மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரனூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனவும், அதில் இரண்டு, ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது.
பாரதபுழா ஆற்றுப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தை கிடைத்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கேரளா எக்ஸ்பிரஸ் வந்ததால், அதனைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் சிக்கிய அந்த நான்கு தொழிலாளர்கள் ரயிலில் மோதி பக்கத்தில் இருந்த ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் லட்சுமணன், ராணி மற்றும் வள்ளி என அடையாளம் காணப்பட்டனர். மற்ற நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. ரயிலில் அடிபட்டு ஆற்றில் விழுந்த அவர்களின் உடலை கண்டெடுக்கும் பனி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரின் உடல் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பணியில் வேறு ஊழியர்கள் பணியில் இருந்தார்களா?அல்லது இந்த 4 பேர் மட்டும் தானா? எனவும் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.