நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்களா? அண்ணே மீண்டும் மீண்டுமா? சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நயன்தாராவுடன் விஜய்யை சீமான் ஒப்பிட்டு பேசியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் சீமானை பலரும் இன்னும் கூடுதலாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சென்னை : விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து தன்னுடைய தம்பி..தம்பி என ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க மாநாட்டுக்குப் பிறகு விஜய்யைத் தாக்கி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, நேற்று விஜய் மாநாட்டில் வைத்திருந்த வேலுநாச்சியார் கட்அவுட் நான் வரைந்தது…நான் வரலன்னா வேலுநாச்சியார் யார் என்று தெரிந்திருக்காது. வேலு நாச்சியார் வரலாறு தெரியுமா என்று விஜய்யை நோக்கி கேள்வியையும் எழுப்பி…கை குழந்தையை உப்புமூட்டை போல தோளில் கட்டிக்கொண்டு வெள்ளையர்களுடன் போரிட்டவர் தான் வேலு நாச்சியார் எனப் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து உண்மை என்னவென்று ஆராய்ந்த விஜய் ஆதரவாளர்கள் சீமான் வேலுநாச்சியார் கதை என்று இராணி இலட்சுமிபாய் கதையைச் சொல்வதைக் கண்டுபிடித்தனர். ஏனென்றால், த.வெ.க மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் புகைப்படம் 2008-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட 5 ரூபாய் அஞ்சல் தலையில் இடம்பெற்றிருந்தது. அந்த சமயம் சீமான் கட்சி தொடங்கவில்லை. சினிமாவில் ‘வாழ்த்துக்கள்’ என்கிற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். எனவே, இதனைக் குறிப்பிட்டும் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
அதைப்போல, சீமான் வேலுநாச்சியார் வரலாறு குறித்துப் பேசியிருந்ததும் தவறு தான். அது ஜான்சி ராணியின் வரலாறு எனவும் கலாய்த்து வருகிறார்கள். உண்மை என்னவென்று, வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் வேலு நாச்சியார் கணவர் இறந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் போரிட்டார் என்பதும் ஹைதர் அலியின் படைகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு, வெள்ளையர்களுக்கு எதிராகத் தீரத்துடன் போரிட்டு, உயிர்த்தியாகத்தால் தனது சமஸ்தானத்தை வென்றார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் சீமானை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் நயன்தாரா…கேப்டன் விஜயகாந்த் ஆகியோருக்கு கூடாத கூட்டமா? சேலத்தில் 40 விவசாயிகள் போராட்டம் செய்யும் போது கடை திறக்க வந்த நயன்தாராவைப் பார்ப்பதற்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்” எனக் கூறினார்.
இதனையடுத்து, இதுவும் சீமான் தெரியாமல் சொன்னது போல இருப்பதாக மீண்டும் அவருடைய பேச்சைக் கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால், கடந்த 2015-ஆம் ஆண்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையை திறந்து வைப்பதற்காக நயன்தாரா வருகை தந்திருந்தார். அவரை பார்க்கக் கூட்டம் கூடியதும் உண்மை தான். ஆனால், சீமான் சொல்வது போல 4 லட்சம் மக்கள் கூடவில்லை 1 லட்சத்திற்குள் வந்திருக்கலாம் என அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துப் பார்க்கையில் தெரிகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்…
எனவே, இதன் மூலம் நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடியதாகவும் சீமான் சொன்னது பொய் எனத் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வேலுநாச்சியார் கதை பற்றிப் பேசியதற்கு ட்ரோல் செய்து வரும் நிலையில், இப்போது நயன்தாரா கூட்டம் குறித்தும் இவர் பேசியிருப்பது மேற்கொண்டும் ட்ரோல் செய்யும் காரணமாக அமைந்துள்ளது.