அமரன் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…நேரில் அழைத்து படக்குழுவுக்கு பாராட்டு!
‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்த ரஜினிகாந்த் படக்குழுவினர்-ஐ தன்னுடதா வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
சென்னை : அசோக் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட் அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகியுள்ள காரணத்தால் மக்கள் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்று வருகிறார்கள்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் பார்க்கும்போது மிகவும் எமோஷனலாக இருந்த காரணத்தால் படம் பார்த்துவிட்டு மக்கள் கண்கலங்கிய மாதிரி தான் வெளியே வருகிறார்கள். அந்த அளவுக்குப் படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருவது போலப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
குறிப்பாக, துப்பாக்கி, அசுரன் போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு படத்தினை பார்த்துவிட்டுப் பாராட்டி இருந்தார். அதைப்போல, இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் படம் பற்றிப் பாராட்டியும் கூறியிருந்தார்.
அவர்களைத் தொடர்ந்து நல்ல படங்கள் வெளியானால் தொடர்ச்சியாகப் பாராட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அமரன் படத்தினை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்து படம் பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளார். சில நேரங்கள் படத்தினை பற்றி விட்டு அதன்பிறகு படக்குழுவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.