“திராவிடமும் தேசியமும் ஒன்றா.? அது கொள்கை அல்ல., அழுகிய முட்டை.!” விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்.! 

தேசியமும், திராவிடமும் ஒன்றா.? அது கொள்கையல்ல., கூமுட்டை என த வெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

TVK Vijay - NTK Leader Seeman

சென்னை  : கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் , தேசியமும் திராவிடமும் தவெக கொள்கை என்றும், தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரை தனது கட்சி கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தினார்.

ஏற்கனவே, அவர் கூறிய ‘கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ‘ என்ற கூற்றுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தவெக கொள்கை தலைவர்கள் பற்றி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”   இது கொள்கை அல்ல கூமுட்டை., வாட் ப்ரோ.? its verry wrong bro., ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு., நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து போயிருவ. இது சினிமாவில் பேசும் பன்ச் டயலாக் இல்ல தம்பி., நெஞ்சு டயலாக். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.? தமிழ்த்தேசியத்தை கொன்று குவித்தபோது அதனை வேடிக்கை பார்த்து திராவிடம். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட காட்டாத., 2026-ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.

நீ வைத்திருக்கும் வேலுநாச்சியார் கட்அவுட் நான் வரைந்தது தம்பி. வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி தம்பி., நான் வரலன்னா வேலுநாச்சியார் யார் என்று தெரிந்திருக்காது. அழகுமுத்துக்கோன் யாரென்று தெரிந்திருக்காது., அஞ்சலையம்மாளை யாருக்கும் தெரியாது., சேர சோழ பாண்டியர் யாருன்னு தெரிந்திருக்காது. பெரியாரிடம் பெண்ணுரிமை பெற்றீர்கள் என்கிறீர்கள்., அப்படியென்றால் வேலு நாச்சியாரிடம் எதனை பெற்றீர்கள்.?

1947-ல் பெரியார், ‘ தமிழ் மாகாணம் கேட்பது கேடு விளைவிக்கும்.’ என கூறி, ‘தமிழ் மாகாணம் கேட்டு போராடும் போராட்டத்தில் தமிழர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் .’ கூறினார் அவர் தான் உங்கள் வழிகாட்டி. 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்று பேசிக் கொண்டிருக்கிறாய்.” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்