அமலுக்கு வந்தது புதிய UPI ரூல்ஸ்! கவனிக்க வேண்டிய முக்கிய 3 மாற்றங்கள் இது தான்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), யுபிஐ தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI), யுபிஐ லைட் பிளாட்பார்மில் (UPI Lite Platform) மூன்று கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
அது, யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கும் விதத்தில் இந்த முக்கிய மாற்றத்தை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்று தற்போது பார்க்கலாம்.
பரிவர்த்தனை வரம்பு :
அதில், முதலாவதாக, இன்று முதல் (நவ-1) பணத்தின் பரிவர்த்தனை வரம்பு அதிகரித்துள்ளது. அதாவது, முன்னதாக யுபிஐ லைட் சேவையின் கீழ் ஒவ்வொரு பயனரும் ரூ.500 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பு ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளனர்.
யுபிஐ லைட் வாலட் வரம்பு :
பரிவர்த்தனை வரம்பைப் போல வாலட் வரம்பையும் ஆர்பிஐ அதிகரித்துள்ளது. அதன்படி, முன்னதாக ரூ.2000 வரை மட்டுமே வாலட் வரம்பு இருந்தது. ஆனால், தற்போது ரூ.5000 வரை யுபிஐ லைட் வாலட் வரம்பு.
அதாவது முன்னதாக ரூ.2000வரை பேலன்ஸ் நாம் வாலட்டில் வைத்துக் கொள்ள முடியும், அது தற்போது ரூ.5000 வரை வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
யுபிஐ ஆட்டோ அப்டேட் :
இதெல்லாம் தாண்டி மூன்றாவதாக, யுபிஐயில் புதிதாக ஆட்டோ அப்டேட் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். அதாவது, முன்னதாக வாலட்டில் திடீரென பணம் தீர்ந்து விட்டால் அதைப் பயனர்கள் தாங்களாகவே நிரப்பி வந்தனர்.
ஆனால், தற்போது வாலட்டே ஆட்டோ அப்டேட் முறையில் யுபிஐ வாலெட்டில் பணத்தை நிரப்பிக் கொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) கூற்றுப்படி, இந்த செயல்முறை கைமுறையாக ரீசார்ஜ் செய்வதற்கான தேவையை நீக்குகிறது எனக் கூறியிருக்கிறது.
மேலும், இதனை நினைவூட்டும் வகையில் கடந்த ஆகஸ்ட் 27, 2024 தேதியிட்ட என்பிசிஐ அறிவிப்பில் யுபிஐ லைட் ஆட்டோ-பே பேலன்ஸ் அம்சம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிராய் :
டிராய் (TRAI) எனப்படும் இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையமானது மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகளை நவம்பர் 1 முதல் அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்பொழுது அதனை அமல்படுத்துவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.