துப்பாக்கியை கரெக்டா புடிச்சுட்டாரு போல? ‘அமரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் 'அமரன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.35 கோடிக்கு வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Amaran Box Office

சென்னை : சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் தீபாவளிக்கு (நேற்று) திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது அமரன் திரைப்படம். ஆரம்பத்தில் சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதன்பின் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனம் மட்டுமே வரத் தொடங்கியது.

அந்த அளவிற்கு அமரன் திரைப்படத்தில் கதையும், கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்திற்கு ஷூட்டிங் தொடங்கியது முதலே எதிர்பார்ப்பு இதற்கு மிகுந்த வண்ணமே அமைந்தது.

அதற்கு மிக முக்கிய காரணம், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் தான். ராணுவ வீரரின் வாழ்க்கையில் அமைந்த உண்மை நிகழ்வுகளைப் படமாக எடுப்பதாலும் அதற்கு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிப்பதிலும் இதற்கு எதிர்பார்ப்பு குவிந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அமரன் திரைப்படம் தமிழ் மட்டுமன்றி, இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. மேலும், வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.35 கோடி வரையில் வசூல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதே நேரம், தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ.15 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் இந்த வாரம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் வார இறுதியில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்படும் எனவும் கருதப்படுகிறது.

மேலும், நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ரூ.100 கோடியைக் கடக்கவும் வாய்ப்புக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு இதற்கு முன்னதாக ‘டான்’ மற்றும் ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஏற்கனவே தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா, அதாவது விஜய் கோட் படத்தில் கொடுத்த துப்பாக்கியைச் சரியாகப் பிடிப்பாரா? எனக் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் மூலம், விஜய் துப்பாக்கியைச் சரியாகப் பிடித்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
PMK MLA Metur Sadhasivam - BJP State president Annamalai
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain