தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதர்,Bloody Beggar,அமரன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும் கொண்டாட சில நல்ல படங்களும் வெளியாகவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அமரன்
சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் இந்த அளவுக்கு ஒரு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது இந்த அமரன் படத்திற்குத் தான் என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு குடும்ப ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தினை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 44 வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, பயங்கரவாத தாக்குதல் நடந்த போது அவரது உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கை கதை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
Bloody Beggar
அமரன் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் திரைப்படம் என்றால் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Bloody Beggar படம் பார்க்கத் தான். இந்த படத்தினை பார்க்க இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கக் காரணமே படத்திலிருந்து வெளியான டிரைலர் தான் காரணம். ஏனென்றால் ட்ரைலரில் இது தான் படத்தின் கதை என வெளிப்படையாகக் கூறாமல் கதையவே சஸ்பென்சாக வைத்துள்ளார்கள். அதன் காரணமாகத் தான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
பிரதர்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படம் ஒரு நல்ல குடும்ப படமாக இருக்கும் என்பதை வெளியான படத்தின் ட்ரைலரை வைத்துப் பார்க்கையில் தெரிந்தது. அது மட்டுமின்றி படத்தில் அக்கா -தம்பி பாசம் பாசத்தை நிலைநாட்டும் ஒரு படமாகவும் இருக்கும். அதற்காகத் தான் படத்திற்குத் தலைப்பு கூட பிரதர் என்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் கூட்டமாகக் கொண்டாட இந்த படங்கள் சரியாக இருக்கும் என்பதால் தான் இந்த படங்களைத் தீபாவளி பண்டிகையை அன்று படத்தை ரிலீஸ் செய்ய இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுப் படத்தினை ரிலீஸ் செய்துள்ளார்கள்.