விளையாட்டுத் திடல்களை தனியார் மையமாக்கும் தீர்மானம்! வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி !!
சென்னையில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மையமாக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது
சென்னை : மாநகராட்சி மேயரான ஆர்.பிரியா தலைமையில் நேற்று மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால் பந்து திடல்களை தனியாருக்கு அளிக்க உள்ளதாக ஒரு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசி இருந்தார். மேலும், அவரைத் தொடர்ந்து அன்புமணி ராமதாசும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாணவர்களும் மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இப்படி தனியார் மையமாக்கப்பட்டால் அது அவர்களது திறமைக்கு புற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இருக்கிறது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று (புதன்கிழமை) விளையாட்டு திடல்களை தனியார் மையமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றதாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், அதை ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக கொள்கிறேன்”, என் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதனால், அங்கு நேற்று ஆர்ப்பாட்டம் செய்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
மாணவ – மாணவியர்களின் கோரிக்கையினையேற்று,
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.…
— Priya (@PriyarajanDMK) October 30, 2024