“விஜய் பாயசம் என்று சொன்னது சரி தான்”- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!
மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம்தான் என தவெக தலைவர் விஜய் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருக்கிறார்.
சென்னை : தவெகவின் முதல் மாநாடானது கடந்த 27-ம் தேதி வெற்றிகரமாக விக்ரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், மேடையில் உணர்ச்சி போங்க பேசி இருப்பார். அது தான், தற்போது வரையில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று 117-வது தேவர் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று காலை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கம் உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறியதாவது, “தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரிதான்.
மத்திய அரசு பாசிசத்தை நோக்கிச் செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் அல்லாமல் பாயாசமா? என நடிகர் விஜய் சரியாகத் தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுகிறது.
இது பாசிசம் இல்லையா? அனைத்து விதத்திலும் ஜனநாயக விரோத செயலை செய்து அதன் மூலம் பத்திரிகையாளர்கள், விவசாயிகள், ஆகிறார்களை திமுக அரசு ஒடுக்கி வருகிறது. எம்ஜிஆர் உலகம் முழுவதும் இரவா புகழாக உள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி துவங்கும் பொழுது அவரது முதல் மாநாட்டில் எம்ஜிஆரைப் பற்றிப் பேசினார். தற்பொழுது விஜய் அவருடைய மாநாட்டில் எம்ஜிஆரைப் பற்றிப் பேசி உள்ளார். இன்று வரை அவருடைய புகழ் பேசப்படுகிறது.
ஆனால் கருணாநிதியின் புகழை ஒருவர் கூட பேசவில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடைய புகழைப் பேசி வருகின்றனர்,” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.