மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

tn rainfall

சென்னை : தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னையில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்