இரத்தம் தெறிக்கும் காட்சிகள்! கங்குவா படக்குழுவுக்கு சென்சார் குழு போட்ட கண்டிஷன்ஸ்!

இன்று கங்குவா படம் சென்சார் குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

Kanguva Censored ‘ U/A

சென்னை : கங்குவா படத்தின் ப்ரமோஷன் எந்த அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது என்பது பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற காரணத்தால் படத்தின் ப்ரோமோஷன் மும்மரமாக முழு வீச்சில் மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கியுள்ள காரணத்தால் படத்தினை படக்குழுவினர் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்குச் சமீபத்தில் அனுப்பி வைத்திருந்தனர். அங்குப் படத்தினை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். அத்துடன் படத்தில் ரத்தம் தெறிக்க இருந்த சண்டைகாட்சிகளிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

அதாவது, படத்தில் தலை துண்டிக்கும் காட்சிகள் சில இடங்களிலிருந்துள்ளது. அந்த காட்சிகள் சில எடிட்டிங் செய்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, ஒரு மனிதன் காற்றில் தூக்கி எறியப்பட்டது போல ஒரு காட்சியும் இருந்துள்ளது. அத்துடன், சில காட்சிகளில் வரும் ரத்தம் நிஜமான ரத்தம் போல இருப்பதால் சில இடங்களில் அதனை “BLUR” செய்யவும் படக்குழுவுக்கு சென்சார் குழு உத்தரவிட்டுள்ளது.

எந்த காட்சிகளையும் நீக்காமல் அதனை சில மாற்றங்கள் மட்டுமே சென்சார் குழு செய்திருக்கிறது. மேலும், கங்குவா படம் வரலாறு சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் நிச்சயமாக 3 மணி நேரம் இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தற்போது படத்தின் சென்சார் குழு கொடுத்த அறிக்கையின் மூலம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 34 நிமிடம் தான் ஓடும் எனத் தெரிய வந்துள்ளது. இந்த நேரத்திற்குள் மக்களுக்குப் பிடிக்கும் படி எடுக்கப்பட்டு மீதமுள்ள சஸ்பென்ஸ் அனைத்தையும் இரண்டாவது பாகத்தில் படக்குழு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்