நாட்டின் GDP யை உயர்த்துவதே என் இலக்கு பிரதமர் மோடி பேச்சு..!!

Default Image

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாகவே உயர்த்துவதே இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது:- தொழில்நுட்பம் நம்மை ஒற்றுமைபடுத்தும் சக்தியாக திகழ்கிறது. அமைதியை எட்ட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்கு உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. இந்தியா தனது வரலாறை நினைத்து பெருமை கொள்கிறது. நமது வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பானது உலகம் முழுதும் பிரதிபலிக்கிறது.
உங்களின் ஆசிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறன். குஜராத் முதல்வராக நான் இருந்த போது, போஹ்ரா சமுதாயத்தினர் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களுடனான எனது உறவு பழமைவாய்ந்தது. இந்த அன்பு தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்துள்ளது.  இந்த சமுதாயத்தினர் எனது குடும்பத்தினர் போல் உள்ளனர்.இப்பகுதி மக்கள் மஹாத்மா காந்தியுடன் இணைந்து போராடினர். நாட்டின் அமைதியில் போஹ்ரா சமுதாயத்தினர் முக்கிய பங்களிக்கின்றனர். இளைஞர்களின் முன் மாதிரியாக உள்ளனர். வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமைதிக்காக நிறைய பணிகளை செய்துள்ளனர். ஏழைகளுக்கு முன்னேற்றம் காண உதவியுள்ளனர்.
தூய்மை திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த  முயற்சி செய்து வருகிறோம். கடந்த காலாண்டில் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. இதனை 10 சதவீதமாக இலக்கு நிர்ணயித்துள்ளோம்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்