தீபாவளி ஸ்பெஷல் – அசத்தலான சுவையில் பருப்பு வடை செய்வது எப்படி.?

தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுவென பருப்பு  வடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

masal vadai (1)

சென்னை –தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுவென பருப்பு  வடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

  • கடலைப்பருப்பு= ஒரு கப்
  • பூண்டு =5 பள்ளு
  • பச்சை மிளகாய்= 4
  • இஞ்சி =ஒரு துண்டு
  • சோம்பு =ஒரு ஸ்பூன்
  • பெருங்காயம்= அரை ஸ்பூன்
  • வெங்காயம்= இரண்டு
  • கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு
  • கருவேப்பிலை= சிறிதளவு
  • மஞ்சள் தூள் =ஒரு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்= மூன்று
  • எண்ணெய் =தேவையான அளவு

channa dhal (1)

செய்முறை;

முதலில் கடலைப்பருப்பை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு ,இஞ்சி ,சோம்பு ஆகியவற்றை இரண்டு சுற்று அறைத்துக் கொண்டு பின்  ஊற வைத்துள்ள கடலைப்பருப்பை தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு கைப்பிடி அளவு கடலைப்பருப்பை எடுத்து வைத்துவிட்டு மீதம் உள்ளவற்றை  சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

masala items (1)

இப்போது அரைத்தவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடியாக நறுக்கிய  வெங்காயம்,காய்ந்த மிளகாய் , கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை சிறிதளவு ,பெருங்காயம்  ,மஞ்சள் தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து  கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வடை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும் .இப்போது  பிசைந்த மாவை வடை போல் தட்டி எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பருப்பு  வடை தயார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்