விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்த தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் பெருமிதம்!

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sunita Willilams

வாஷிங்க்டன் : கடந்த 5 மாதங்களாகச் சர்வதேச விண்வெளியிலிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதாரண ஒரு சோதனைக்காக விண்வெளி சென்ற இவர், திரும்பப் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளார்.

மேலும், அதோடு தற்போது அடுத்தகட்ட ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உலகம் முழுவதும் நாளை மறுநாள் (அக்-31, வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையாகப் பார்க்கப்படும் இது, உலகம் முழுவதும் பரவி உள்ள ஹிந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போல, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும் அமெரிக்க இந்தியர்களால் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து 260 மையில் தொலைவில் பணியாற்றி வரும் சுனிதா வில்லியம்ஸ் பூமியிலிருந்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில், “வெள்ளை மாளிகையில் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த வருடம் பூமியிலிருந்து 260 மைல் தொலைவில் விண்வெளி மையத்திலிருந்து தீபாவளி கொண்டாடும் அறிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்தியக் கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்கிறேன்” என சுனிதா வில்லியம்ஸ் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்