களைகட்டிய தவெக மாநாடு: “தலைவா.. வா..” முழக்கமிடும் ரசிகர்கள்.!

மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜயை எதிர் நோக்கி அவரின் ரசிகர்கள் "தலைவா.. வா" என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

manaadu tvk vijay

விழுப்புரம்: தவெக மாநாடு விக்ரவாண்டியின் வி.சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மாநாட்டின் திடலுக்குள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு இடையே இன்று காலை முதல் திடலுக்கு வந்து விஜயை பார்க்க வேண்டும், அவருக்கான தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என காத்துக்கிடக்கின்றனர். தமிழக மக்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எப்போது மாநாட்டு திடலுக்கு வருவார்? மேடையில் வந்து எப்போது பேசுவார் என காத்துக்கிடக்கின்றனர். இந்த சூழலில்தான் அங்கிருக்கும் விஜயின் தொண்டர்கள், “தலைவா.. வா..” என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்