“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது” – கொடியை ஏற்றினார் விஜய்.!
தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
விழுப்புரம் : தவெக மாநாடு தொடங்கிய நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி வணக்கம் செய்தார்.
இருபுறமும் அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ராம்ப்பில் நடந்து சென்ற தலைவர் விஜய்யை நோக்கி, தொண்டர்கள் கட்சித் துண்டுகளை வீச, சிலவற்றை அப்படியே கேட்ச் பிடித்த விஜய், தன் தோளில் அணிந்து கொண்டார்.
தற்பொழுது, மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து பின், 101 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்றினார். அப்போது, தவெகவின் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது.
கம்பத்தில் கொடியேற்றும்போது தொண்டர்கள் தளபதி, தளபதி என்று முழக்கம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். கொடியை ஏற்றியவுடன் நெகிழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் சிரித்துக்கொண்டே கண்கலங்கினார். “தலைவன் கொடி தமிழன் கொடி” என்ற முழக்கத்தோடு வான் உயரப் பறந்து கொண்டிருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்
இந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படாது. இதற்காக தவெக கட்சி சார்பில், மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்ற என்பவரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 8 அடி ஆழமான அடித்தளம் மற்றும் 120 சதுர அடி பரப்பளவில் கொடி பீடத்துடன் கொடிக் கம்பம் நடப்பட்டுள்ளது.
இந்த மாநாடு நடைபெறும் இடம் 27 விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் என்றும், அதில் சிலர் அதிக விலைக்கும், மீதமுள்ளர்கள் பணமே வேண்டாம் என விஜய்க்காக இந்த நிலத்தை மாநாட்டிற்காக குத்தகைக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.