தவெக மாநாடு : தொடங்கியது வெற்றிக் கொள்கைத் திருவிழா! தொண்டர்கள் ஆரவாரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடானது தற்போது கலை நிகழ்ச்சியுடனும், தொண்டர்களின் ஆரவாரத்துடனும் தொடங்கியிருக்கிறது.

vijay tvk maanadu

விழுப்புரம் :  தவெக கட்சியின் முதல் மாநாடானது தற்போது தொண்டர்களின் ஆரவாரத்துடன் தொடங்கியிருக்கிறது. நள்ளிரவு முதல் தொண்டர்கள், ரசிகர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் விஜயை காண குவிந்துள்ளனர். மேலும், காலை முதல் வெயில், பசி, தாகம் என எதையும் பாராமல் விஜயின் பேச்சுக்காகவே காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது தவெக கட்சியின் முதல் மாநாடானது தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வில், தொடர்ந்து கட்சித் தலைவரான விஜய் விரைவில் மாநாட்டு மேடைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், அவர் என்ன பேச போகிறார் என்று எதிர்பார்த்து தொண்டர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்