“நீண்டகால நண்பரான விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

யார் வேண்டுமெனாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோமென்பதே முக்கியம் என்று முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin -Vijay

சென்னை : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இன்று அதிகாலை முதலே அதிகளவிலான தொண்டர்கள் மாநாட்டு திடலில் கூடியுள்ளனர்.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தினார்.

இந்த விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், “நான் முதலில் தயாரித்த படமே அவர் படம் தான். யார் வேண்டுமெனாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோமென்பதே முக்கியம். விஜய் நீண்ட கால நண்பர், அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்” இவ்வாறு தவெக மாநாடு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதில் கூறியுள்ளார்.

இனி வரும் காலங்களில் எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்படும், விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலினை இப்பொழுதே சேர்த்து பேச துவங்கி உள்ளனர். இதற்கு முன்னதாக, விஜய் கட்சி துவங்கியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆகவே பதில் அளித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVKMaanadu VIJAY Speech
Thalapathy Vijay
TVKMaanadu vijay song
Tamilaga Vettri Kazhagam Ideology Song
TVK Uruthimozhi
TVK Maanadu Vijay