“விஜய்க்கு எனது ஆதரவு..எனது தந்தை ஆசியும் உண்டு” வாழ்த்து தெரிவித்த நடிகர் பிரபு!

விஜய்க்கு எனது முழு ஆதரவு விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன் என நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பிரபு தெரிவித்துள்ளார்.

tvk vijay sivaji ganesan prabhu

விழுப்புரம் : நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின்  முதல் மாநாட்டை இன்று  விக்ரவாண்டி வி.சாலையில்  பிரமாண்டமாக நடத்துகிறார். அவருடைய மாநாட்டை காண்பதற்கு கடல் அலைகள் போல மக்கள் கூட்டம் விக்ரவாண்டியை சூழ்ந்துள்ளது.

முதல் மாநாட்டை நடந்தும் த.வெ.க தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருவது போல, மற்றோரு பக்கம் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   அந்த வகையில், நடிகர் பிரபு மனதில் இருந்து நெகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்த்துக்களையும் விஜய்க்கு தெரிவித்து விஜயின் தைரியத்தை பாராட்டியும் பேசியிருக்கிறார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரபு ” விஜய் தைரியமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது.

விஜய்க்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு. அதைப்போல என்னுடைய தந்தை ஆசியும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்” எனவும் பிரபு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVKMaanadu VIJAY Speech
Thalapathy Vijay
TVKMaanadu vijay song
Tamilaga Vettri Kazhagam Ideology Song
TVK Uruthimozhi
TVK Maanadu Vijay