ஸ்தம்பிக்கும் தவெக மாநாடு.! 5.கிமீ முன்னரே நிறுத்தப்பட்ட வாகனங்கள்.!
போக்குவரத்து நெரிசல் காரணமாக தவெக மாநாடு நடைபெறும் இடத்திற்கு 5.கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு வாகனங்களில் அணிவகுத்து வருகின்றனர்.
நேற்று இரவு முதலே மாநாடு நடைபெறும் இடத்தில் தவெக தொண்டர்கள் குவியதொடங்கி விட்டனர். இன்று மற்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டி சுற்றியுள்ள டோல்கேட் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஏற்கனவே, மாநாடு பகுதியில் 2கிமீ பரப்பளவு கொண்ட பார்க்கிங் முழுதாக நிரம்பியதால் தவெக தொண்டர்கள் வாகனங்கள் மேலும், உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 5கிமீ தொலைவுக்கு முன்னரே டோல்கேட் பகுதியில் தவெக வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தவெக தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி வருவதால், தற்போது மாநாட்டை விரைந்து தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.