தவெக மாநாட்டில் வைரலாகும் அஜித் புகைப்படம்: தல ரசிகன் தளபதி தொண்டன்.!
தவெக மாநாட்டு திடலில் அவசரகால பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.

விழுப்புரம் : விக்ரவாண்டி வி.சாலையில் தவெக மாநாடு ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் அவசரகால பயன்பாட்டிற்காக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் திடலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிலவற்றில் அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ள நிலையில், சிவனும், சக்தியும் சேந்தா மாசுடா என்ற அடிப்படையில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரை இணைத்து வைத்து நட்புறவாட தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025