தவெக மாநாடு : ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழக்கவில்லை.! வெளியான புதிய தகவல்..,
தவெக மாநாட்டிற்கு வந்த இளைஞர் விழுப்புரம் அருகே ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த செய்தி உண்மையில்லை என்றும், அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று மாலை மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே தவெக தொண்டர்கள் திரளானோர் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவிந்து வருகின்றனர். தற்போது பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இப்படியான சூழலில், சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயிலில் பயணித்த தவெக தொண்டர் ரயிலில் விக்கிரவாண்டி அருகே ரயிலில் தவறி விழுந்து படுகாயமுற்று உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகின. ஏற்கனவே ஒரு இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு செய்திகள் வெளியாகின.
இப்படியான சூழலில், அந்த செய்தியில் உண்மையில்லை என தற்போது தக்வல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது புதுக்கோட்டையை சேர்ந்த நிதிஷ் குமார் என்ற இளைஞர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். தற்போது அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்றும், ரயில்வே அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.