தவெக மாநாடு : கட்அவுட் முக்கியமல்ல., கருத்தியல் தான் முக்கியம்.! சீமான் பேச்சு.! 

தலைவர்களின் கட்அவுட்கள் முக்கியமல்ல அவர்களின் கருத்தியல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதுவே முக்கியம் என மதுரையில் சீமான் பேட்டியளித்துள்ளார்.

TVK Leader Vijay - NTK Leader Seeman

சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. நேற்று இரவு முதலே திரளான தொண்டர்கள் மாநாடு திடலை நோக்கி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர் ,வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்அவுட்கள் பற்றியும், தவெக மாநாடு பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ” ஒரு அரசியல் கட்சி வருகிறது ன்றால் அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் வரும்போது எங்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லை. தமிழர்கள் நாங்கள் இப்போதும் அனாதையாக நிற்கிறோம். நிச்சயம் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தந்தை பெரியார், அம்பேத்கர், கட்அவுட்டுகளை தம்பி விஜய் வைத்துள்ளார். அண்ணா கட்அவுட் வைக்காது காரணம் வேறு எதுவாக இருக்கலாம். அவர் திமுகவை தோற்றுவித்தவர். பெரியார், வேலுநாச்சியார் போன்ற தலைவர்கள் கட் அஅவுட்களை அவர் வைத்துள்ளார் அது மகிழ்ச்சி. அண்ணன் நான் தலைவர் பிரபாகரன் பெயரைக் கூறி வருவதால், ‘அவர் அண்ணன் வைத்துள்ளார்.’ என்று விட்டு இருக்கலாம்.

வேலுநாச்சியார் , அம்பேத்கர் இவர்கள் புகைப்படங்களை வைப்பது பெரியதல்ல. அவர்களின் கருத்துகளை கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும். நான் வந்து பேசவில்லை என்றால் சுந்தரலிங்கனார், வேலு நாச்சியார் இவர்களை பற்றி எல்லாம் அடுத்த தலைமுறைக்கு தெரிந்திருக்குமா என்பது கூட தெரியாது. ஒன்றாக பயணிப்பது பற்றி தம்பி விஜய் தான் தீர்மானிக்க வேண்டும்.” என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்