தவெக மாநாடு: தொண்டர்களே.. ரசிகர்களே.. QR கோடு கவனிச்சீங்களா? இது எதுக்கு தெரியுமா?

மாநாட்டில் வருகையை திறம்பட கண்காணிக்கவும் கூட்டத்தை நிர்வகிக்கவும் இந்த புதுமையான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TVK Maanadu QR Code

விழுப்புரம் : விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், இருக்கைகள் என அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி, மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க தவெக-வினர் அதீத கவனம் செலுத்தி, இரவு பகலாக உழைத்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு கியூ.ஆர் கோடு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்,  மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களின் பதிவை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர் எண்களைக் கண்காணிக்கவும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு அரங்கில் QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் வருகையை திறம்பட கண்காணிக்கவும் கூட்டத்தை நிர்வகிக்கவும் இந்த புதுமையான முறை கைகொடுக்கும். QR குறியீடுகளின் பயன்பாடு சீரான மற்றும் திறமையான செக்-இன் செயல்முறையை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, TVK ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வந்தவுடன் தங்கள் பாஸ்களை பதிவு செய்ய QR குறியீடுகளை எளிதாக ஸ்கேன் செய்யலாம். அதன் மூலம் பங்கேற்பவர்களுக்கு ஒரு  சான்றிதலும் வழங்கபடுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்