ஈரானில் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்!

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.

Israeli Iran

இஸ்ரல் : ஈரானின் “இராணுவ இலக்குகள்” மீது, இன்று (அக்டோபர் 26) அதிகாலையே துல்லியமான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2 ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது, 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு இந்த தாக்குதல் பதிலடியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தெஹ்ரான் மற்றும் அருகிலுள்ள கராஜ் நகரைச் சுற்றி குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும், தாக்குதல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதில், “ஈரான் மண்ணில் இருந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடி என இஸ்ரேல் அறிவித்ததோடு, எங்கள் நாட்டையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம். எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு” என்று கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்