IND vs AUS : பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

INDvNZ

மும்பை : இந்த ஆண்டில் கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் தொடர் தான் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர். இந்தத் தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

நவம்பர் 22இல் பெர்த்தில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நடைபெறவிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், 3 வீரர்கள் ரிசர்வ் வீரராக செல்லவுள்ளனர். மேலும் முகமது சமி இந்தத் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்சித் ரானாவுக்கு முதல்தடவையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக பிசிசிஐ அறிவித்தது போல ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியத்துவமான தொடராகும்.

அதாவது, தற்போது நியூசிலாந்து தணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இந்திய அணி தொடரில் தோல்வி அடையும் தருவாயில் இருந்து வருகிறது. இதனால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

இதன் காரணமாக, ஐந்து டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி கண்டிப்பாக நான்கு வெற்றிகளை பெற்றிருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அதேவேளை ஆஸ்திரேலியா அணிக்கும் இது முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணிக்கு ஈடாக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நடைபெறும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது.

அறிவிக்கப்பட்ட இந்திய அணி :

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா, சிராஜ், ஆகாஷ் தீப், பிரசீத் கிருஷ்ணா, ஹர்சித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

ரிசர்வ் வீரர்கள் :

முகேஷ் குமார், நவதீப் சைனி, கலீல் அகமது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்