தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா ?. அதன் மறைக்கப்பட்ட பல உண்மை வரலாறுகள் ..!

தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும்  கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல  வரலாற்று காரணங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .

diwali story tamil

சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும்  கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல  வரலாற்று காரணங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .

ராமாயணமும் தீபாவளியும் ;

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது.  ராமாயணத்தில்  ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து சீதா மற்றும் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள் அமாவாசை இரவு.. இந்த இருட்டு வேளையில் அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அவர்களை அகல் விளக்கு ஏற்றி வரவேற்றுள்ளனர் .இந்த தீப ஒளியில் மூலம் நாட்டை அடைந்தார்கள். இவர்கள் வந்த நாள் தீபாவளி நாளாகும் .தீப ஒளியின் வெளிச்சத்தில் வந்ததால்  தீபாவளியை தீப ஒளி என்றும் கூறுகின்றனர் .

ஸ்கந்த புராணமும்  தீபாவளியும் ;

மற்றொரு புராண கதையும் உள்ளது ,ஸ்கந்த புராணத்தின் படி பார்வதி தேவியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவடைந்த பிறகு சிவன் பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்று அர்த்தநாதீஸ்வரர்  உருவம் எடுத்த நாளாக கூறப்படுகிறது.  இதனை நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தில் வாயிலாக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது . மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர் .அதன் பின் அவர்கள் போரிட்டு வெற்றி பெற்று நகரம் திரும்பிய போது நாட்டின் மக்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

சமண மற்றும் புத்த சமயமும்  ..தீபாவளியும் ;

சமண மதத்தின் படி பீகார் மாநிலத்தில் கி.மு 599 இல் பிறந்தவ தான் மகாவீரர். இவர் பிறந்த நாள் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதைப் போல் முக்தி அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாமன்னர் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி ஆக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் விதமாக புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், வங்காளதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளும் தீபாவளியை வெளிச்ச நாளாக கொண்டாடுகின்றனர்.

நரகாசுரன் அழிக்கப்பட்ட வரலாறும் தீபாவளியும் ;

இதில் நம் தமிழ்நாட்டுக்கு என்று பரவலாக பேசப்படுவது நரகாசுரனின் கதைதான். இது பலருக்கும் தெரிந்த கதையாக உள்ளது. பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும் பகுமன்  என்ற மகன் பிறக்கிறான். அவர் பல துர்குணங்களை பெற்றிருக்கிறான். அதனால் நரக அசுரன் என்று கூறப்பட்டு நாளடைவில் நரகாசுரன் என்று அழைக்கப்படுகிறான். அவன்  வளர்ந்த பிறகு தேவர்களையும் தேவலோக பெண்களையும் மிகவும் துன்புறுத்துகின்றான். அது மட்டுமல்லாமல் பிரம்மாவிடம் தன் தாய் கையால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்று விடுகிறான்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரனுடன்  போரிடுகிறான். அப்போது நரகாசுரன் கிருஷ்ணனின் மீது அம்பை எய்துகிறார். இதனால் கிருஷ்ணர் மயக்கம் அடைவது போல் கீழே விழுகின்றார். இதை பார்த்த பூமாதேவி கோபமுற்று  சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனுடன் போரிட்டு அவனை அம்பால்  எய்ததால்  பழியாகிறான் .

அப்போதுதான் அவள் தன் தாய் என உணர்கிறான். இறக்கும் தருவாயில் ஒரு வரம் கேட்கிறார்.. என் பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் இறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கேட்கிறார்.. அதற்கு கிருஷ்ணரும் அந்த வரத்தை கொடுக்கிறார்.  இந்த வரலாற்று கதைகள் அனைத்தும்  நடந்த இடம் வடநாட்டில் தான் .கிபி  15ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக முனிவர் தோ பரமசிவன் அவர்கள் கூறுகிறார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu