கண்டமிதிலா? கண்டமதிலா? தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!!

உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு ஊழியர்கள் தவறாக பாடியதாக பேசப்பட்டு வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

udhayanidhi stalin Tamil Thai Vazhthu

சென்னை : சமீபத்தில் ஆளுநர் ரவி கலந்து கொண்டிருந்த இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு பாடப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதற்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என ஆளுநர் விளக்கமும் அளித்திருந்தது இருந்தார். எனவே, இந்த விவகாரம் முடிந்தது.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து இன்று தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாகப் பாடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசுப் பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.

அப்போது, நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் எனப் பாடுவதற்குப் பதிலாக (கண்டமதில்) எனப் பாடினார். அப்போதே உதயநிதி ஸ்டாலின் பாடியவரைப் பார்த்து ஒரு ரியாக்சன் கொடுத்தார். அதன்பிறகு, மீண்டும் உதயநிதி பாட சொன்ன நிலையில், மீண்டும் பாடச் சொன்ன உதயநிதி கூறினார். இரண்டாவது முறை பாடும்போது புகழ்மணக்க என்பதை திகழ் மணக்க என்று, முறையும் தவறாகப் பாடியதால் உதயநிதி ஸ்டாலின் முகத்தைக் கோபமாக வைப்பது போலப் பாடியவர்களைப் பார்த்து ரியாக்சன் கொடுத்தார்.

உதயநிதி விளக்கம்

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாகப் பாடப்பட்டது என்ற செய்தி கிளம்பு ஆரம்பித்தது. எனவே, நிகழ்ச்சி முடிந்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து தவறா பாடல.. Technical faultதான் எனச் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இது குறித்துப் பேசிய அவர் ” தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. இதற்குக் காரணம் தொழில்நுட்ப கோளாறு தான். மைக் சரியாக வேலை செய்யவில்லை, இரண்டு.. மூன்று.. இடத்தில் பாடியது குரல் கேட்கவில்லை அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலிலிருந்து சரியாகப் பாடியிருக்கிறோம். நிகழ்ச்சியில் தேசிய கீதமும் சரியாகப் பாடப்பட்டுள்ளது. எனவே, இதனை ஒரு பிரச்சினையாக மாற்றவேண்டாம்” எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்