ஓட்டுக்கு பணம் அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்…தடை விதித்து எச்சரிக்கை விடுத்த கோர்ட்!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிக்கும் எலான் மஸ்க் ஓட்டளிப்பதற்கு பணம் அளிக்கும் செயலாக இருப்பதால், அதற்கு கோர்ட் தடைவிதித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தனித் தனியாக ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இருவருக்கும் ஒபாமா, எலான் மஸ்க் போன்ற பெரிய பெரிய ஆட்களும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக, டோனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்குத் தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக அறிவித்து பிரச்சாரம் செய்து வந்தார். இந்த பரிசுத் தொகை வழங்குவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு வழங்க உள்ளதாகவும் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்.
இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களுடைய புகார்களைத் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ” இப்படிப் பணம் கொடுப்பது கொடுக்கல் வாங்கல் போன்றது மற்றும் சட்டப்பூர்வமா விசாரணைக்கு உகந்தது” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இதனைக் கவனித்த நீதித்துறை இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனக் கூறி எலான் மஸ்க்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மஸ்கின் இந்த செயல் கூட்டாட்சி சட்டத்தை மீறக்கூடிய வகையில் இருப்பதாகவும், மக்கள் ஓட்டுப்போடுவதற்குப் பணம் அளிக்கும் செயலாகவும் இருப்பதால், அதற்குத் தடை விதிக்கப்படுகிறது எனவும் நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.