“இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்”…மாநாடு குறித்து த.வெ.க தலைவர் விஜய் நெகிழ்ச்சி!

மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம் என த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tvk vijay happy

விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நாளை மறுநாள் விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து  விசாலையில் உள்ள பிரமாண்ட இடத்தில் நடைபெறுகிறது. மாநாடு நாள் நெருங்கியுள்ள காரணத்தால் இப்போதே பல மாவட்டங்களில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு மக்கள் கிளம்பு தயாராகி வருகிறார்கள். மாநாடு நடைபெறும் ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ,  விஜய் தனது தொண்டர்களை பார்க்க  அந்த அளவுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார் என்பது குறித்து நெகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை எழுதி அதனை அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே…நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.

மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்” என நெகிழ்ச்சியாக அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்