பாரமுல்லாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 3 பேர் காயம்..4 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பொதுமக்கள், 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

jammu kashmir attack

ஜம்மு- காஸ்மீர் : நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில்  3 வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவத்துக்கு சொந்தமான ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) வாகனம் குல்மார்க் ஸ்கை ரிசார்ட் அருகே போடாபத்ரியில் உள்ள சௌக் பகுதியில் நின்று கொண்டு இருந்தது. அப்போது,இதனை நோட்டமிட்டிருந்த  பயங்கரவாதிகள் வாகனம் மீது நேற்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது இந்த தாக்குதலில் அங்கிருந்த இரண்டு வீரர்கள் மற்றும் இரண்டு சிவிலியன் போர்ட்டர்கள் (civilian porter) கொல்லப்பட்டனர் மற்றும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.காயமடைந்த வீரர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” “வடக்கு காஷ்மீரின் பூட்டா பத்ரி பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், சில உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருப்பது குறித்த செய்து என்னை கலங்க வைத்தது.

காஷ்மீரில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் நடந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் மற்றும் உயிரிழந்த மக்களின் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய பிரார்த்திக்கிறேன” எனக் கூறியுள்ளார்.

மேலும், அதைப்போல, நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா நீதிமன்றத்தில் ஆவணங்கள் வைக்கப்படும் அறையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு சம்பவம் நடந்த நிலையில், ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது மேலும் ஜம்மு-காஷ்மீரை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்