நெருங்கிய தவெக மாநாடு : 3 மணி நேரம் திடீர் ஆய்வு… டிஎஸ்பி சொன்ன தகவல்?

த.வெ.க மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி "சொன்னதற்கு அதிகமாகவே தண்ணீர் வசதி கழிவறை வசதி தயார் செய்து" வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

villupuram TVK Maanadu

விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தினுடைய கண் அனைத்தும் மாநாடை  நோக்கி தான் இருக்கிறது. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை எடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கை என்னவென்ன என்பதை கேட்க ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்படி எப்படி வேலை நடக்கிறது என்பதை அக்கட்சித் தலைவர் விஜய் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார். அதைப்போல, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று 3 மணி நேரம் ஆய்வு செய்தனர்.

என்ன நடந்தது?

ஆய்வு செய்த முடித்த பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்குச் செய்யப்பட்டு இருக்கிறது? என்பது பற்றி விசாரித்தனர். ஏற்கனவே, மாநாடு நடத்தக்கோரி அனுமதி கேட்டு மனு அளித்தபோதே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து 21 கேள்விகள் அடங்கிய ஒரு நோட்டிஸ்க்கு பதில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதில் முக்கியமாக மாட்டிற்கு வருபவர்களுக்குத் தண்ணீர் எப்படி வழங்கப்படப்போகிறது? கழிவறை வசதி எப்படிச் செய்யப்போகிறீர்கள்? வாகனம் நிறுத்த என்ன ஏற்பாடு? என்ற கேள்வியைக் கேட்டு இருந்தார்கள். அதற்குக் கட்சி தரப்பிலிருந்தும் இத்தனை கழிப்பறைகள் தயார்செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

எனவே, இந்த வேலைகள் சரியாக நடக்கிறதா? பார்க்கிங் வசதி சரியாகச் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்துத் தான் 3 மணி நேரம் மேலாக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டார்கள்.

டிஎஸ்பி சொன்ன தகவல்

ஆய்வு செய்து முடித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் ” மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வருகிறோம். சொன்னதற்கு அதிகமாகவே தண்ணீர் வசதி கழிவறை வசதி தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும், மாநாடு வேலைகள் முடியவில்லை. விரைவில் முடிந்துவிடும்” எனவும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்