அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!
அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசாவின் பிதர்கனிகா – தாம்ப்ரா இடையே கரையை கடந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.